இரண்டு முதல் ஆறு வயது வரை உள்ள குழந்தைகளுக்கான மதிய உணவு திட்டத்தின் உணவூட்டு செலவின தொகையை உயர்த்தி உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் இரண்டு முதல் ஆறு வயதுள்ள குழந்தைகளுக்கு தினசரி மதிய உணவு திட்டம் செயல்பட்டு வருகிறது. தற்போது இந்த திட்டத்திற்கு ரூபாய் 4,114 கோடி கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் 11.50 லட்சம் குழந்தைகள் பயன் பெறுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது உயர்த்தி வழங்கப்பட்ட செலவினப்படி தினசரி காய்கறிகளுக்கான செலவினம் 1.33 எனவும், உப்பு உள்ளிட்ட தாளித பொருள்களுக்கான செலவினம் 0.46 எனவும், எரிபொருளுக்கான செலவினம் 0.60 எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.