தெலுங்கானா மற்றும் புதுச்சேரி கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன் தனது பதவியை திடீரென ராஜினாமா செய்தார்.
தமிழிசை சௌந்தரராஜன் தெலுங்கானா மற்றும் புதுச்சேரி கவர்னராக இருந்த நிலையில் தனது பதவியை திடீரென ராஜினாமா செய்தார். இதனை அடுத்து இதற்கான கடிதம் ஜனாதிபதி திரௌபதி முர்முவிற்கு அனுப்பி வைக்கப்பட்டது. இவரது ராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி திரௌபதி முர்மு ஏற்றுக்கொண்டார். அதனை அடுத்து தெலுங்கானா மற்றும் புதுச்சேரி கவர்னர் பொறுப்புகளை ஜார்கண்ட் மாநில கவர்னர் சி.பி ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது. இரு மாநிலங்களுக்கும் புதிய கவர்னர் நியமனம் செய்யும் வரை இந்த பொறுப்புகளை இவர் ஏற்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.