காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவியில் இருந்து ஆதிர் ரஞ்சன் சவுத்ரி விலகியுள்ளார்.
மேற்கு வங்காள மாநில காங்கிரஸ் கட்சி தலைவராக, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஆதிர் ரஞ்சன் சவுத்ரி இருந்து வந்தார். இவர் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் தோல்வியடைந்தார். இந்த நிலையில் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இது குறித்த எந்தவித அதிகாரப்பூர்வ தகவல்களும் இன்னும் வெளியாகவில்லை. மேலும் இவர் முர்ஷிதாபாத் பஹரம்பூர் மக்களவைத் தொகுதியில் ஐந்து முறை எம்பியாக தேர்வு பெற்றார். பதவி விலகலுக்கான காரணம் என்ன என்று இதுவரை சரியாக தெரியவில்லை. எனினும் இந்தியா கூட்டணி தொகுதி பங்கீடு தொடர்பாக மம்தா ஆதிர் ரஞ்சன் சவுத்ரி இடையே கடுமையான போர் நடைபெற்றதாகவும், மல்லிகார்ஜுனா கார்கே இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது