அரவிந்த் கெஜ்ரிவால்,தனது பதவியை ராஜினாமா செய்த நிலையில், கல்வித் துறை அமைச்சராக இருந்த அதிஷி இன்று டெல்லியின் புதிய முதல்வராக பதவியேற்கவுள்ளார்.
டெல்லி மாநில முதல்வராக அதிஷி இன்று புதிய பதவியேற்பு விழாவை கொண்டாடவுள்ளார். கடந்த 155 நாட்களாக திகார் சிறையில் இருந்த அரவிந்த் கெஜ்ரிவால், கடந்த வாரம் ஜாமினில் விடுவிக்கப்பட்டு, தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். அதனை தொடர்ந்து, கல்வித் துறை அமைச்சராக இருந்த அதிஷி, இப்போது புதிய முதல்வராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதன்படி இன்று மாலை 4.30 மணிக்கு ராஜ் நிவாஸில் அவர் பதவியேற்க உள்ளார். குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, அவரை அதிகாரப்பூர்வமாக நியமித்துள்ளார், இதனால் நாட்டில் உள்ள இரண்டாவது பெண் முதல்வராகவும் இவர் பெயரடைந்துள்ளார்.