புனேவில் உள்ள வானியல் மற்றும் வான இயற்பியலுக்கான பல்கலைக்கழகம் இஸ்ரோவிடம் புதிய தொலைநோக்கியை ஒப்படைத்துள்ளது. சூட் (SUIT) என்று பெயரிடப்பட்டுள்ள இந்த தொலைநோக்கி, Solar Ultraviolet Imaging Telescope என்பதன் சுருக்கமாகும். இது, சூரியன் குறித்த ஆராய்ச்சிக்காக, இஸ்ரோவின் முதல் திட்டமான ஆதித்யா L1 திட்டத்தில் விண்ணுக்கு அனுப்பப்படும் என கூறப்பட்டுள்ளது. மேலும், ஆதித்யா திட்டத்தில், பூமிக்கு வெளியே, சூட் தொலைநோக்கி உட்பட 7 கருவிகள் அமைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த தொலைநோக்கி, சூரியனிலிருந்து வெளியாகும் புற ஊதா கதிர்களை ஆய்வு செய்யும் என கூறப்பட்டுள்ளது. மேலும், சூரியனின் வளிமண்டலம் மற்றும் மேற்பரப்பின் தெளிவான புகைப்படங்களை எடுத்து அனுப்பும் என கூறப்பட்டுள்ளது. இந்த தொலைநோக்கியின் வடிவமைப்பில், 200க்கும் மேற்பட்ட விஞ்ஞானிகள் பங்கேற்றுள்ளனர். கடந்த 2012 ஆம் ஆண்டு, இது தொடர்பாக முதல் முறையாக அறிவிக்கப்பட்டு, 2016 ஆம் ஆண்டு தொலைநோக்கியின் வடிவமைப்பு தொடங்கப்பட்டது.