ஆதித்யா எல் -1 விண்கலம் வெற்றிகரமாக சூரியனின் எல் -1 புள்ளியை நோக்கி நகர்த்தப்பட்டுள்ளது.கடந்த செப்டம்பர் 2 ஆம் தேதி சூரியனை ஆய்வு செய்வதற்காக ஆதித்யா எல் -1 விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்டது. பின்னர் இது புவியின் சுற்று வட்ட பாதையில் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டது. இது நான்கு மாத பயணத்திற்கு பின்னர் தனது இலக்கை சென்று அடையும். பின் அங்கிருந்து சூரியனை கண்காணித்து ஆய்வு பணியில் ஈடுபடும் என்று இஸ்ரோ தெரிவித்தது. இந்நிலையில் ஐந்தாவது முறையாக சுற்றுவட்ட பாதை அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி இன்று அதிகாலை 2 மணி அளவில் சூரியனின் எல் -1 புள்ளியை நோக்கி ஆதித்யா எல் -1 விண்கலம் வெற்றிகரமாக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் இந்த விண்கலத்தில் செயல்பாடுகள் அனைத்தும் தற்போது சீராக உள்ளது என இஸ்ரோ தெரிவித்துள்ளது.