சூரியனை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்ட ஆதித்யா எல் 1 விண்கலம் ஒளிவட்ட பாதையை நிறைவு செய்ததாக இஸ்ரோ அறிவித்துள்ளது.
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து சூரியனை ஆய்வு செய்வதற்காக ஆதித்யா எல் 1 விண்கலம் செப்டம்பர் மாதம் விண்ணில் ஏவப்பட்டது. இது பூமியிலிருந்து 15 லட்சம் கிலோமீட்டர் தூரம் 125 நாட்கள் பயணித்து சூரியனுக்கு அருகில் உள்ள லக்ராஞ்சியன் புள்ளியில் நிலை நிறுத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி ஜனவரியில் எல் -1 புள்ளியினை ஆதித்யா எல் -1 விண்கலம் அடைந்தது. அதனை தொடர்ந்து தற்போது 178 நாட்கள் பயணித்து லக்ராஞ்சியன் புள்ளி 1 இல் தனது ஒளிவட்ட பாதையை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.