செப்டம்பர் 2ல் ஆதித்யா எல் 1 ஏவப்படுகிறது - பொதுமக்கள் பார்வையிட ஏற்பாடு

August 29, 2023

வரும் செப்டம்பர் 2ம் தேதி, ஆதித்யா எல் 1 செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்படும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது. இது, சூரியன் குறித்த ஆய்வுக்காக, முழுக்க முழுக்க உள்நாட்டு தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டுள்ள செயற்கைக்கோள் ஆகும். ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து, பிஎஸ்எல்வி ராக்கெட் மூலம், ஆதித்யா எல் 1 விண்ணில் செலுத்தப்படுகிறது. செப்டம்பர் 2ம் தேதி காலை 11:50 மணிக்கு ஏவுதல் பணிகள் திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில், ராக்கெட் ஏவப்படுவதை பொதுமக்கள் நேரடியாக பார்வை விட […]

வரும் செப்டம்பர் 2ம் தேதி, ஆதித்யா எல் 1 செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்படும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது. இது, சூரியன் குறித்த ஆய்வுக்காக, முழுக்க முழுக்க உள்நாட்டு தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டுள்ள செயற்கைக்கோள் ஆகும்.

ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து, பிஎஸ்எல்வி ராக்கெட் மூலம், ஆதித்யா எல் 1 விண்ணில் செலுத்தப்படுகிறது. செப்டம்பர் 2ம் தேதி காலை 11:50 மணிக்கு ஏவுதல் பணிகள் திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில், ராக்கெட் ஏவப்படுவதை பொதுமக்கள் நேரடியாக பார்வை விட இஸ்ரோ ஏற்பாடு செய்துள்ளது. பொதுமக்கள் இந்த நிகழ்வை பார்வையிட, https://lvg.shar.gov.in/VSCREGISTRATION/index.jsp என்ற இணையதள முகவரியில் முன்பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.சூரியன் மற்றும் பூமி இடையே, 5 சமநிலை புள்ளிகள் உள்ளன. இவை லெக்ராஞ்சியன் புள்ளிகள் என அறியப்படுகின்றன. இவற்றில் நிலைநிறுத்தப்படும் செயற்கைக் கோள்களுக்கு பாதிப்பு நேராது. அந்த வகையில், லெக்ராஞ்சியன் 1 (எல் 1) சமநிலைப் புள்ளியில் ஆதித்யா செயற்கைக்கோள் நிலைநிறுத்தப்பட உள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu