திருப்பதி லட்டு தயாரிக்கும் நெய்யில் கலப்படம் - தமிழக நிறுவனத்திற்கு தடை

திருப்பதியில் தயாரிக்கப்படும் லட்டில் சேர்க்கப்படும் நெய்யில் கலப்படம் இருந்ததால் தமிழக நிறுவனத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு தயாரிப்பதற்காக நெய் வழங்க ஐந்து நிறுவனங்களுக்கு ஒப்பந்தம் வழங்கியுள்ளது. இந்நிலையில் தனியார் நிறுவனங்கள் சப்ளை செய்த நெய்யின் தரம், மணம் மற்றும் சுவையில் குறைபாடு இருந்ததாக எழுந்த குற்றச்சாட்டை தொடர்ந்து அந்த நிறுவனங்களிடமிருந்து பரிசோதனைக்காக கொள்முதல் செய்ய வேண்டிய நெய்யை ஆய்வகத்திற்கு அனுப்பி வைத்தனர். ஆய்வின் முடிவில் தமிழ்நாட்டைச் சேர்ந்த தனியார் நிறுவனம் சப்ளை செய்த […]

திருப்பதியில் தயாரிக்கப்படும் லட்டில் சேர்க்கப்படும் நெய்யில் கலப்படம் இருந்ததால் தமிழக நிறுவனத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு தயாரிப்பதற்காக நெய் வழங்க ஐந்து நிறுவனங்களுக்கு ஒப்பந்தம் வழங்கியுள்ளது. இந்நிலையில் தனியார் நிறுவனங்கள் சப்ளை செய்த நெய்யின் தரம், மணம் மற்றும் சுவையில் குறைபாடு இருந்ததாக எழுந்த குற்றச்சாட்டை தொடர்ந்து அந்த நிறுவனங்களிடமிருந்து பரிசோதனைக்காக கொள்முதல் செய்ய வேண்டிய நெய்யை ஆய்வகத்திற்கு அனுப்பி வைத்தனர். ஆய்வின் முடிவில் தமிழ்நாட்டைச் சேர்ந்த தனியார் நிறுவனம் சப்ளை செய்த நெய்யில் வனஸ்பதி கலந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து தேவஸ்தானம் அந்த நிறுவனத்திற்கு தடை விதித்து கருப்பு பட்டியலில் வைத்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu