நேற்று, சந்திரயான் 3 தரையிறக்க நிகழ்வு நடைபெற்றதை முன்னிட்டு, விண்வெளி மற்றும் பாதுகாப்புத்துறை சார்ந்த பங்குகள் ஏற்றமடைந்துள்ளன. இந்த துறை சார்ந்த பங்குகளுக்கு, முதலீட்டாளர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு காணப்பட்டது.
உச்சபட்சமாக, இந்த துறை சார்ந்த சென்டம் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் பங்குகள் நேற்று 14.91% உயர்வை பதிவு செய்தன. இது தவிர, பரஸ் டிபன்ஸ் அண்ட் ஸ்பேஸ் டெக்னாலஜிஸ் நிறுவனம் 5.47%, எம் டி ஏ ஆர் டெக்னாலஜிஸ் 4.84% , ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் 3.57% உயர்வடைந்துள்ளன. மேலும், பாரத் போர்ஜ் 2.82% , அஸ்ட்ரா மைக்ரோவேவ் 1.72% , எல் அண்ட் டி 1.42% ஏற்றமடைந்துள்ளன. அத்துடன், பெரும்பாலான நிறுவனங்கள் தங்கள் ஒரு வருட உச்சத்தை பதிவு செய்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.