இஸ்ரேலுக்கு ஆயுத விநியோகம் நிறுத்திவைப்பு - அமெரிக்கா

May 9, 2024

ரஃபா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தக்கூடும் என்ற அச்சம் காரணமாக இஸ்ரேலுக்கு ஆயுத விநியோகத்தை அமெரிக்கா தற்போது நிறுத்தியுள்ளது. இது குறித்து அமெரிக்க அதிகாரி ஒருவர் கூறியிருப்பதாவது, இஸ்ரேலுக்கு அனுப்ப 900 கிலோ எடை கொண்ட 1800 வெடிகுண்டுகள், 225 கிலோ எடை கொண்ட 1700 வெடிகுண்டுகளை அமெரிக்க அரசு கடந்த வாரம் தயார் நிலையில் வைத்திருந்தது. எனினும், ரஃபா நகர் மீது இஸ்வேல் தரைவழி தாக்குதலை தொடங்க ஆயத்தமாவது போன்ற சூழல் நிலவி வருவதால் அமெரிக்கா […]

ரஃபா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தக்கூடும் என்ற அச்சம் காரணமாக இஸ்ரேலுக்கு ஆயுத விநியோகத்தை அமெரிக்கா தற்போது நிறுத்தியுள்ளது.

இது குறித்து அமெரிக்க அதிகாரி ஒருவர் கூறியிருப்பதாவது, இஸ்ரேலுக்கு அனுப்ப 900 கிலோ எடை கொண்ட 1800 வெடிகுண்டுகள், 225 கிலோ எடை கொண்ட 1700 வெடிகுண்டுகளை அமெரிக்க அரசு கடந்த வாரம் தயார் நிலையில் வைத்திருந்தது. எனினும், ரஃபா நகர் மீது இஸ்வேல் தரைவழி தாக்குதலை தொடங்க ஆயத்தமாவது போன்ற சூழல் நிலவி வருவதால் அமெரிக்கா ஆயுதங்களின் விநியோகத்தை நிறுத்தி வைத்துள்ளது. இஸ்ரேல் இந்த குண்டுகளை வீசக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. இதனால் இந்த முடிவை அமெரிக்க அரசு எடுத்துள்ளது என்றார்.

இது குறித்து இஸ்ரேல் ராணுவத்தின் செய்தி தொடர்பாளர் டேனியல் அக்கினி எதுவும் கூறவில்லை. ஆனால் அவர் பேசும்போது காசா போரில் இஸ்ரேலுக்கு இதுவரை இல்லாத அளவுக்கு அமெரிக்கா உதவி வருகிறது. இஸ்ரேலை பாதுகாப்பது எங்கள் பொறுப்பு. அதே சமயத்தில் இந்த பகுதியில் அமெரிக்க நலன்களையும் நாங்கள் தான் பாதுகாக்கிறோம் என்றார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu