ஆப்கானிஸ்தானில் தற்கொலைப்படை தாக்குதல் - 21 பேர் பலி

March 22, 2024

ஆப்கானிஸ்தானில் அமைந்துள்ள காந்தஹார் பகுதியில் நேற்று தற்கொலைப்படை தாக்குதல் நடந்தது. இதில் 21 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. காந்தாஹாரில் அமைந்துள்ள வங்கிக்கு உடலில் மறைத்து வைத்திருந்த வெடிகுண்டோடு நேற்று பயங்கரவாதி ஒருவர் வந்துள்ளார். வங்கிக்குள் வெடிகுண்டை வெடிக்கச் செய்து தற்கொலை படை தாக்குதல் நடத்தியுள்ளார். மருத்துவ அதிகாரிகளின் தகவல் படி, இந்த தாக்குதலில் 21 பேர் உயிரிழந்துள்ளனர். ஆனால், தாலிபான் அரசாங்க அதிகாரிகள் இந்த தாக்குதலில் 3 பேர் மட்டுமே உயிரிழந்ததாக தெரிவித்துள்ளனர். இந்த தற்கொலை […]

ஆப்கானிஸ்தானில் அமைந்துள்ள காந்தஹார் பகுதியில் நேற்று தற்கொலைப்படை தாக்குதல் நடந்தது. இதில் 21 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

காந்தாஹாரில் அமைந்துள்ள வங்கிக்கு உடலில் மறைத்து வைத்திருந்த வெடிகுண்டோடு நேற்று பயங்கரவாதி ஒருவர் வந்துள்ளார். வங்கிக்குள் வெடிகுண்டை வெடிக்கச் செய்து தற்கொலை படை தாக்குதல் நடத்தியுள்ளார். மருத்துவ அதிகாரிகளின் தகவல் படி, இந்த தாக்குதலில் 21 பேர் உயிரிழந்துள்ளனர். ஆனால், தாலிபான் அரசாங்க அதிகாரிகள் இந்த தாக்குதலில் 3 பேர் மட்டுமே உயிரிழந்ததாக தெரிவித்துள்ளனர். இந்த தற்கொலை படை தாக்குதலில் பலர் படுகாயம் அடைந்துள்ளனர். அவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu