அமெரிக்காவில் உள்ள மிசிசிப்பி மாகாணத்தில் அமைந்திருக்கும் இரவு நேர விடுதி ஒன்றில் துப்பாக்கிச்சூடு சம்பவம் நடைபெற்றுள்ளது. துப்பாக்கி சூட்டை நடத்திய மர்ம நபர் யார் என்று தெரியவில்லை. இந்த சம்பவத்தில் கிட்டத்தட்ட 16 பேருக்கு குண்டு அடிபட்டுள்ளது. மேலும், 3 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் 19 வயது இளைஞன் உள்ளது குறிப்பிடத்தக்கது. குண்டடிபட்ட 16 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.
இரவு நேர விடுதியில் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட மர்ம நபரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த நிலையில், அமெரிக்காவில் அதிகரித்து வரும் துப்பாக்கி கலாச்சாரம் உலக அளவில் சர்ச்சை பேச்சுவார்த்தைகளை ஏற்படுத்தி உள்ளது.