தமிழ்நாட்டில் 95 கிராமங்களை மேம்படுத்த ஒப்பந்தம்

95 கிராமங்களை மேம்படுத்தும் திட்டத்திற்கு ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்தியாவில் செயல்படும் உலகளாவிய தொழில்நுட்ப நிறுவனமான எச்.சி.எல்.-ன் கார்ப்பரேட் சமூகப் பொறுப்பு அமைப்பான எச்.சி.எல். அறக்கட்டளை, அதன் முதன்மைத் திட்டங்களில் ஒன்றான எச்.சி.எல். (சாமுடே)-ஐ தமிழ்நாட்டின் 95 கிராம ஊராட்சிகளில் செயல்படுத்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முன்னிலையில் தலைமைச் செயலகத்தில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். எச்.சி.எல். சாமுடே தமிழ்நாட்டில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள புதூர் மற்றும் விளாத்திக்குளம் ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 95 கிராம ஊராட்சிகளில் 1,40,000 பயனாளிகளுக்கு […]

95 கிராமங்களை மேம்படுத்தும் திட்டத்திற்கு ஒப்பந்தம் கையெழுத்தானது.

இந்தியாவில் செயல்படும் உலகளாவிய தொழில்நுட்ப நிறுவனமான எச்.சி.எல்.-ன் கார்ப்பரேட் சமூகப் பொறுப்பு அமைப்பான எச்.சி.எல். அறக்கட்டளை, அதன் முதன்மைத் திட்டங்களில் ஒன்றான எச்.சி.எல். (சாமுடே)-ஐ தமிழ்நாட்டின் 95 கிராம ஊராட்சிகளில் செயல்படுத்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முன்னிலையில் தலைமைச் செயலகத்தில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

எச்.சி.எல். சாமுடே தமிழ்நாட்டில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள புதூர் மற்றும் விளாத்திக்குளம் ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 95 கிராம ஊராட்சிகளில் 1,40,000 பயனாளிகளுக்கு பயனளிக்கும் வகையில் நீர்வள மேலாண்மை, விவசாயம், சுகாதாரம், கல்வி, ஊட்டச்சத்து மேலாண்மை போன்ற துறைகளில் கவனம் செலுத்தி, பின்தங்கிய குடும்பங்களுக்கு சிறந்த வருமானத்திற்கு வழிவகுக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu