பிரதமர் நரேந்திர மோடியின் ரஷ்ய பயணத்தில் பல முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன. குறிப்பாக, ரஷ்யா மற்றும் இந்தியா இடையிலான இருதரப்பு வர்த்தகத்தை 8.35 லட்சம் கோடி அளவில் உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது.
வரும் 2030 ஆம் ஆண்டுக்குள் இந்தியா மற்றும் ரஷ்யா இடையிலான வர்த்தக மதிப்பை 835037 கோடி ரூபாயாக (100 பில்லியன் டாலர்) உயர்த்த இரு நாடுகளும் திட்டமிட்டுள்ளன. டாலரில் வர்த்தகம் செய்வதை தவிர்த்து, ரூபிள் மற்றும் ரூபாய் நாணயங்களில் வர்த்தகத்தை மேற்கொள்வதன் மூலம், இந்த இலக்கை அடைய திட்டமிடப்பட்டுள்ளது. பல்வேறு துறைகளில் வர்த்தக ஒத்துழைப்பை அதிகப்படுத்தவும், உள்கட்டமைப்பை மேம்படுத்தவும், டிஜிட்டல் பொருளாதரத்தை ஊக்குவிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 9 முக்கிய ஒப்பந்தங்கள் நேற்று கையெழுத்தாகி உள்ளன.