நாடு முழுவதும் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் அதிமுக ஏழு இடங்களில் டெபாசிட் இழந்துள்ளது.
நாடு முழுவதும் பாராளுமன்றத் தேர்தல் முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டது. இதில் திமுக தலைமையிலான கூட்டணி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் அபார வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில் தென் சென்னை, கன்னியாகுமரி, புதுச்சேரி, தேனி, தூத்துக்குடி, நெல்லை மற்றும் வேலூர் ஆகிய ஏழு தொகுதிகளில் அதிமுக டெபாசிட்ட இழந்துள்ளது. ஒன்பது தொகுதிகளில் மூன்றாம் இடத்திற்கும், மூன்று தொகுதிகளில் நான்காவது இடத்திற்கும் அதிமுக தள்ளப்பட்டுள்ளது. நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் 32 இடத்தில் அதிமுக நேரடியாக போட்டியிட்டது