கர்நாடகாவில் அதிமுக செயலாளர் திடீர் ராஜினாமா

April 10, 2024

கர்நாடகாவில் அதிமுகவின் செயலாளராக எஸ்.டி குமார் இருந்த நிலையில் தனது பதவியை திடீரென ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். கர்நாடகாவில் அதிமுகவின் முக்கிய நிர்வாகப் பொறுப்பில் உள்ளவர்கள் தேர்தலில் அதிமுக வேட்பாளர்களை களம் இறக்க மறுத்ததால் அதிருப்தி அடைந்து ராஜினாமா செய்ய இருப்பதாக தகவல் வெளியானது. மேலும் பிற மாநிலங்களில் அதிமுகவை வளர்க்க வேண்டும் என நினைப்பதாக கர்நாடகா நிர்வாகிகள் வேதனை அடைந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கர்நாடக மாநில அதிமுக செயலாளர் பொறுப்பிலிருந்து எஸ்டி குமார் திடீரென […]

கர்நாடகாவில் அதிமுகவின் செயலாளராக எஸ்.டி குமார் இருந்த நிலையில் தனது பதவியை திடீரென ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.

கர்நாடகாவில் அதிமுகவின் முக்கிய நிர்வாகப் பொறுப்பில் உள்ளவர்கள் தேர்தலில் அதிமுக வேட்பாளர்களை களம் இறக்க மறுத்ததால் அதிருப்தி அடைந்து ராஜினாமா செய்ய இருப்பதாக தகவல் வெளியானது. மேலும் பிற மாநிலங்களில் அதிமுகவை வளர்க்க வேண்டும் என நினைப்பதாக கர்நாடகா நிர்வாகிகள் வேதனை அடைந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கர்நாடக மாநில அதிமுக செயலாளர் பொறுப்பிலிருந்து எஸ்டி குமார் திடீரென ராஜினாமா செய்தார். இது குறித்து அவர் கூறுகையில் கர்நாடகாவில் மக்களவைத் தேர்தலில் போட்டியிட அனுமதி அளிக்கவில்லை. மேலும் யாரை ஆதரித்து பிரச்சாரம் செய்வது என தெரியாமலும் குழம்பியுள்ளனர். அதனால் அதிமுக செயலாளர் பொறுப்பிலிருந்து விலகி உள்ளதாக தெரிவித்துள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu