உலக அளவில் எய்ட்ஸ் நோயால் நிமிடத்திற்கு ஒருவர் உயிரிழப்பதாக ஐநாவின் அதிர்ச்சி அறிக்கை வெளியாகி உள்ளது.
சர்வதேச அளவில் எய்ட்ஸ் பரவலை தடுப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அண்மைக்காலமாக, இந்த நடவடிக்கைகளில் தொய்வு ஏற்பட்டுள்ளதாக ஐநா கூறுகிறது. மேலும், நோய் தொற்று பாதித்தவர்களுக்கு முறையான சிகிச்சை கிடைப்பதில்லை என கவலை தெரிவித்துள்ளது. தற்போதைய நிலவரப்படி, உலக அளவில் 4 கோடி பேருக்கு எச்ஐவி பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், அவர்களில் 90 லட்சத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு முறையான சிகிச்சை கிடைப்பதில்லை எனவும், ஐநா அறிக்கை தெரிவிக்கிறது. மேலும், வட அமெரிக்கா, மேற்கு ஆசியா, கிழக்கு ஐரோப்பா, மத்திய ஆசியா மற்றும் லத்தீன் அமெரிக்கா போன்ற பகுதிகளில் எய்ட்ஸ் பரவல் வேகம் எடுத்துள்ளதாக அறிக்கை தெரிவிக்கிறது.