ஏர் இந்தியா குழுமம், தனது துணை நிறுவனங்களான ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் மற்றும் ஏர் ஏசியா இந்தியாவை ஒன்றிணைத்துள்ளது. இதன் மூலம், 'ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்' என்ற பெயரில் குறைந்த கட்டண விமான சேவை உருவாகியுள்ளது. இந்த இணைப்புக்கு இந்தியாவின் விமானப் போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது. இந்த இணைப்பு நடவடிக்கைகள் நிறைவடைந்த்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. விரைவில் விஸ்தாரா விமான நிறுவனமும் ஏர் இந்தியாவுடன் இணைக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த இணைப்பின் மூலம், ஏர் இந்தியா குழுமம் தனது விமான சேவைகளை ஒரே கூரையின் கீழ் கொண்டு வந்துள்ளது. இதன் மூலம், பயணிகளுக்கு அதிகமான வசதிகள் மற்றும் குறைந்த கட்டணங்களில் பயண வாய்ப்பு கிடைக்கும். தற்போது, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் 88 விமானங்களைக் கொண்டு இந்தியா, வளைகுடா மற்றும் தென்கிழக்கு ஆசியா உள்ளிட்ட 171 இடங்களுக்கு சேவை வழங்குகிறது.