ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் ஊழியர்கள் 30 பேர் பணி நீக்கம் - 2வது நாளாக விமான சேவை பாதிப்பு

கடந்த செவ்வாய் கிழமை முதல் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவன ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஒரே நேரத்தில் நோய் விடுப்பு எடுத்து தங்கள் எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர். அதிக எண்ணிக்கையில் ஊழியர்கள் விடுப்பு எடுத்துள்ளதால், ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான சேவை இரண்டாம் நாளாக பாதிப்படைந்துள்ளது. ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் உடன் ஏ ஐ எக்ஸ் கனெக்ட் நிறுவனத்தை ஒன்றிணைக்கும் முயற்சியில் டாடா குழுமம் ஈடுபட்டுள்ளது. ஆரம்பத்தில் இருந்தே இந்த நடவடிக்கைக்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் […]

கடந்த செவ்வாய் கிழமை முதல் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவன ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஒரே நேரத்தில் நோய் விடுப்பு எடுத்து தங்கள் எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர். அதிக எண்ணிக்கையில் ஊழியர்கள் விடுப்பு எடுத்துள்ளதால், ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான சேவை இரண்டாம் நாளாக பாதிப்படைந்துள்ளது.

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் உடன் ஏ ஐ எக்ஸ் கனெக்ட் நிறுவனத்தை ஒன்றிணைக்கும் முயற்சியில் டாடா குழுமம் ஈடுபட்டுள்ளது. ஆரம்பத்தில் இருந்தே இந்த நடவடிக்கைக்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் ஊழியர்களிடையே அதிருப்தி நிலவியதாக கூறப்படுகிறது. பல்வேறு நிலைகளில் தங்கள் நிறுவன ஊழியர்களுக்கு பாகுபாடு காட்டப்படுவதாக ஊழியர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். இதற்கிடையே, செவ்வாய்க்கிழமை முதல் நூற்றுக்கும் மேற்பட்ட ஊழியர்கள் திடீர் பணி நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். விமான நிறுவனம் சார்பில் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், போராட்டத்தில் ஈடுபட்ட 30 பேரை ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் பணி நீக்கம் செய்துள்ளதாக அறிவித்துள்ளது. இந்த எண்ணிக்கை மேலும் உயரலாம் என கூறப்படுகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu