விமானங்களை சரியான நேரத்தில் இயக்குவதில் ஏர் இந்தியா முதலிடம்

November 23, 2022

விமானங்களை சரியான நேரத்தில் இயக்குவதில் ஏர் இந்தியா முதலிடம் பெற்றுள்ளது. பெங்களூரு, டெல்லி, ஐதராபாத் மற்றும் மும்பை ஆகிய நான்கு மெட்ரோ விமான நிலையங்களில் திட்டமிடப்பட்ட உள்நாட்டு விமானங்களின் நேர செயல்திறனை சிவில் ஏவியேஷன் கணக்கிட்டது. அதன் அடிப்படையில், விமான போக்குவரத்து இயக்குனரகம் தரவரிசை பட்டியல் வெளியிட்டுள்ளது. அதில், விமானங்களை சரியான நேரத்தில் இயக்குவதில் ஏர் இந்தியா முதலிடத்தில் உள்ளது. 2-ம் இடத்தில் விச்தாரா மற்றும் ஏர் ஏசியா நிறுவனமும் கடைசி இடத்தில் கோ பர்ஸ்ட் நிறுவனமும் […]

விமானங்களை சரியான நேரத்தில் இயக்குவதில் ஏர் இந்தியா முதலிடம் பெற்றுள்ளது.

பெங்களூரு, டெல்லி, ஐதராபாத் மற்றும் மும்பை ஆகிய நான்கு மெட்ரோ விமான நிலையங்களில் திட்டமிடப்பட்ட உள்நாட்டு விமானங்களின் நேர செயல்திறனை சிவில் ஏவியேஷன் கணக்கிட்டது. அதன் அடிப்படையில், விமான போக்குவரத்து இயக்குனரகம் தரவரிசை பட்டியல் வெளியிட்டுள்ளது. அதில், விமானங்களை சரியான நேரத்தில் இயக்குவதில் ஏர் இந்தியா முதலிடத்தில் உள்ளது. 2-ம் இடத்தில் விச்தாரா மற்றும் ஏர் ஏசியா நிறுவனமும் கடைசி இடத்தில் கோ பர்ஸ்ட் நிறுவனமும் உள்ளன.

மேலும் இந்தாண்டு உள்நாட்டு விமான பயணிகளின் எண்ணிக்கை 9.88 கோடி எனவும், இதன் மூலம் விமானத்துறை 59.16% வளர்ச்சி பெற்றுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. குறைந்த விலை விமான சேவைகளில், ஸ்பைஸ்ஜெட் தனது சந்தைப் பங்கை 7.3 சதவீதத்தில் தக்க வைத்துக் கொண்டது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu