புதிதாக 1000 விமானிகள் நியமிக்க திட்டம் - ஏர் இந்தியா

April 28, 2023

ஏர் இந்தியா நிறுவனம் தனது விமான போக்குவரத்து மற்றும் வழித்தடங்களை விரிவு படுத்துவதாக அறிவித்திருந்தது. தற்போது இந்த விரிவுபடுத்தல் நடவடிக்கைக்கு ஏற்ப, ஆயிரத்துக்கும் மேற்பட்ட விமானிகளை பணியமர்த்த திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கேப்டன், பயிற்சியாளர் உட்பட பல பதவிகளுக்கு ஆட்சேர்ப்பு நடைபெற உள்ளது. “தற்போதைய நிலையில், ஏர் இந்தியாவில் 1800 க்கும் மேற்பட்ட விமானிகள் பணியாற்றி வருகின்றனர். ஏர் இந்தியாவின் விமான சேவைகளை விரிவுபடுத்தும் நோக்கில், புதிய விமானங்களுக்கு ஆர்டர்கள் வழங்கப்பட்டுள்ளன. போயிங், ஏர்பஸ் போன்ற முன்னணி விமான […]

ஏர் இந்தியா நிறுவனம் தனது விமான போக்குவரத்து மற்றும் வழித்தடங்களை விரிவு படுத்துவதாக அறிவித்திருந்தது. தற்போது இந்த விரிவுபடுத்தல் நடவடிக்கைக்கு ஏற்ப, ஆயிரத்துக்கும் மேற்பட்ட விமானிகளை பணியமர்த்த திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கேப்டன், பயிற்சியாளர் உட்பட பல பதவிகளுக்கு ஆட்சேர்ப்பு நடைபெற உள்ளது.

“தற்போதைய நிலையில், ஏர் இந்தியாவில் 1800 க்கும் மேற்பட்ட விமானிகள் பணியாற்றி வருகின்றனர். ஏர் இந்தியாவின் விமான சேவைகளை விரிவுபடுத்தும் நோக்கில், புதிய விமானங்களுக்கு ஆர்டர்கள் வழங்கப்பட்டுள்ளன. போயிங், ஏர்பஸ் போன்ற முன்னணி விமான தயாரிப்பு நிறுவனங்களிடம் ஆர்டர்கள் கொடுக்கப்பட்டுள்ளன. தற்போது, விமானங்களை இயக்குவதற்கான பிரிவுகளில் ஆட்சேர்ப்பு நடைபெற உள்ளது” - இவ்வாறு ஏர் இந்தியா தெரிவித்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu