இஸ்ரேல் செல்லும் ஏர் இந்தியா விமான சேவை ஆகஸ்ட் 8 ஆம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது.
இஸ்ரேல் - ஹமாஸ் இடையே நடைபெறும் போரின் காரணமாக கடந்த ஆண்டு அக்டோபர் முதல் ஏர் இந்தியா விமான சேவை நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. அதனை தொடர்ந்து 5 மாதங்களுக்கு பிறகு மீண்டும் கடந்த மார்ச் முதல் விமான சேவை தொடங்கிய நிலையில் ஹமாஸ் தலைவர் கொலை தொடர்பான விவகாரம் காரணமாக ஏர் இந்தியா தனது இஸ்ரேலின் தெல் அவீவுக்கு செல்லும் மற்றும் அங்கிருந்து வரும் அனைத்து விமான சேவைகளையும் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. இந்தப் பகுதியில் நிலவும் போர் காரணமாக, பயணிகள் மற்றும் விமான குழுவினரின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, வரும் 8 ஆம் தேதி வரை இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.இதற்கிடையில், பாதிக்கப்பட்ட விமானங்களில் பயணம் செய்த பயணிகளுக்கு மாற்று விமானங்கள் ஏற்பாடு செய்யப்படும் அல்லது முழு தொகை திருப்பித் தரப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.