சென்னையில் காற்று மாசுபாடு அதிகரிக்கும் - ஆய்வில் தகவல்

August 30, 2023

சென்னை, மதுரை,திருச்சி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் 2019-20ஆம் ஆண்டில் மாசு தொடர்பான ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பெங்களூரில் உள்ள அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் கொள்கை ஆய்வு மையம் மூலம் நடத்திய ஆய்வில் அனல் மின் நிலையம் மற்றும் கனரக தொழிற்சாலைகள் அதிகமாக இருப்பதால் தூத்துக்குடியில் காற்று மாசுபாடு அதிகமாக உள்ளது. ஆனால் அதை விட இருமடங்கு அதிகமாக சென்னையில் காற்று மாசுபாடு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் காற்று மாசுபாட்டை குறைக்க நடவடிக்கைகள் எடுக்காமல் இருந்தால் 2030 ஆம் ஆண்டு […]

சென்னை, மதுரை,திருச்சி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் 2019-20ஆம் ஆண்டில் மாசு தொடர்பான ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

பெங்களூரில் உள்ள அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் கொள்கை ஆய்வு மையம் மூலம் நடத்திய ஆய்வில் அனல் மின் நிலையம் மற்றும் கனரக தொழிற்சாலைகள் அதிகமாக இருப்பதால் தூத்துக்குடியில் காற்று மாசுபாடு அதிகமாக உள்ளது. ஆனால் அதை விட இருமடங்கு அதிகமாக சென்னையில் காற்று மாசுபாடு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் காற்று மாசுபாட்டை குறைக்க நடவடிக்கைகள் எடுக்காமல் இருந்தால் 2030 ஆம் ஆண்டு சென்னை,திருச்சி மாவட்டங்களில் அதிகபட்சமாக 27 சதவீதமும், மதுரையில் 20 சதவீதமும், தூத்துக்குடியில் 16 சதவீதமும் காற்று மாசுபாடு ஏற்படும் என ஆய்வில் தெரிய வந்துள்ளது.

இந்த காற்று மாசுபாட்டை எரிபொருள் பயன்பாட்டை நிலக்கரியில் இருந்து புதிய ஆற்றலுக்கு மாற்றுவது, தரமான சாலைகளின் உள் கட்டமைப்புகள், தொழிற்சாலைகள் மற்றும் போக்குவரத்தில் வெளியாகும் மாசுபாடுகளை குறைக்கும் கடுமையான நடவடிக்கைகளை பின்பற்றுதல் போன்றவற்றின் மூலம் குறைக்கலாம் என தொழில்நுட்பம் மற்றும் கொள்கை ஆய்வுக்கான மையத்தின் மூத்த ஆய்வாளர் கூறியுள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu