உலகில் அதிகமாக மாசடைந்த முதல் 100 நகரங்கள் ஆசியாவில் உள்ளன. அதில் 83 நகரங்கள் இந்தியாவில் உள்ளதாக IQAir அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளது. அதிலும் குறிப்பாக, உலக சுகாதார மையம் அறிவுறுத்திய காற்று தர வழிமுறைகளை காட்டிலும் 10 மடங்கு கூடுதலாக அந்த நகரங்களில் காற்று மாசு ஏற்பட்டுள்ளது என IQAir அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
உலக அளவில் 7800 க்கும் அதிகமான நகரங்களின் காற்று தரம் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. அதில், வெறும் 9% நகரங்களில் மட்டுமே காற்று தரம் நல்ல நிலையில் உள்ளது. பெரும்பாலான நகரங்களில் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடிய PM2.5 நுண் துகள்கள் அதிகமாக காணப்பட்டுள்ளன. இந்த நுண் துகள்கள் ஒரு சதுர மீட்டருக்கு 5 மைக்ரோகிராம் அளவுக்குள் இருந்தால் மட்டுமே காற்று தரம் நல்ல நிலையில் இருப்பதாக அர்த்தம். இந்த பட்டியலில் பீகார் மாநிலத்தை சேர்ந்த பெகுசராய் என்ற நகரம் அதிக மாசடைந்த நகரமாக முதல் இடத்தில் உள்ளது.