ஜெர்மன் ராணுவ செயற்கைக்கோள் ஒப்பந்தத்தை கைப்பற்றியது ஏர்பஸ்

ஜெர்மன் ராணுவத்தின் செயற்கை கோள்களை ஏவும் ஒப்பந்தத்தை ஏர்பஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. கிட்டத்தட்ட 2.5 பில்லியன் டாலர்களுக்கு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. அதன்படி, ஜெர்மன் இராணுவத்தின் அடுத்த தலைமுறை தொலை தொடர்பு செயற்கைக்கோள்களை ஏர்பஸ் டிஃபென்ஸ் அண்ட் ஸ்பேஸ் நிறுவனம் ஒப்படைக்கும். ஜெர்மன் நாட்டின் SATCOMBw 3 செயற்கைக்கோள்களை ஏர்பஸ் நிறுவனம் வழங்க உள்ளது. இது கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் வழங்கப்பட்ட SATCOMBw 2 செயற்கைக்கோள்களுக்கான மாற்றாகும். ராணுவ தொலைத்தொடர்பு சேவையில் இது அடுத்த கட்ட வளர்ச்சியை […]

ஜெர்மன் ராணுவத்தின் செயற்கை கோள்களை ஏவும் ஒப்பந்தத்தை ஏர்பஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. கிட்டத்தட்ட 2.5 பில்லியன் டாலர்களுக்கு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. அதன்படி, ஜெர்மன் இராணுவத்தின் அடுத்த தலைமுறை தொலை தொடர்பு செயற்கைக்கோள்களை ஏர்பஸ் டிஃபென்ஸ் அண்ட் ஸ்பேஸ் நிறுவனம் ஒப்படைக்கும்.

ஜெர்மன் நாட்டின் SATCOMBw 3 செயற்கைக்கோள்களை ஏர்பஸ் நிறுவனம் வழங்க உள்ளது. இது கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் வழங்கப்பட்ட SATCOMBw 2 செயற்கைக்கோள்களுக்கான மாற்றாகும். ராணுவ தொலைத்தொடர்பு சேவையில் இது அடுத்த கட்ட வளர்ச்சியை கொண்டு வரும் என கருதப்படுகிறது. இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானதை ஜூலை நான்காம் தேதி அறிவித்தனர். மேலும், அடுத்த 15 ஆண்டுகளுக்கு இந்த செயற்கைக்கோள் சேவைகளை வழங்குவதற்கான ஒப்பந்தத்தில் இரு தரப்பும் கையெழுத்திட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu