ஆகாசா ஏர் - 150 போயிங் 737 மேக்ஸ் விமானங்கள் ஆர்டர்

January 18, 2024

ஆகாசா ஏர் விமான நிறுவனம் 150 போயிங் 737 மேக்ஸ் விமானங்களை ஆர்டர் செய்துள்ளது. அதன்படி, 17 மாதங்களில் 200க்கும் மேற்பட்ட விமானங்களை ஆர்டர் செய்த ஒரே இந்திய விமான நிறுவனமாக வரலாறு படைத்துள்ளது. ஹைதராபாத்தில் விங்ஸ் இந்தியா விமான கண்காட்சி நடைபெற்று வருகிறது. இதில் வைத்து ஆகாசா ஏர் நிறுவனத்தின் விமான ஆர்டர் குறித்த விவரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தோடு, ஆகாசா ஏர் நிறுவனத்தின் மொத்த விமானங்கள் எண்ணிக்கை 226 ஆக உயர்கிறது. தற்போதைய நிலையில், 76 […]

ஆகாசா ஏர் விமான நிறுவனம் 150 போயிங் 737 மேக்ஸ் விமானங்களை ஆர்டர் செய்துள்ளது. அதன்படி, 17 மாதங்களில் 200க்கும் மேற்பட்ட விமானங்களை ஆர்டர் செய்த ஒரே இந்திய விமான நிறுவனமாக வரலாறு படைத்துள்ளது.

ஹைதராபாத்தில் விங்ஸ் இந்தியா விமான கண்காட்சி நடைபெற்று வருகிறது. இதில் வைத்து ஆகாசா ஏர் நிறுவனத்தின் விமான ஆர்டர் குறித்த விவரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தோடு, ஆகாசா ஏர் நிறுவனத்தின் மொத்த விமானங்கள் எண்ணிக்கை 226 ஆக உயர்கிறது. தற்போதைய நிலையில், 76 ஆகாசா ஏர் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. புதிய விமானங்களுடன் இணைந்து, வரும் 2032 ஆம் ஆண்டில், ஆகாசாவின் விமான இயக்கம் முழு செயல்பாட்டுக்கு வரும் என கூறப்பட்டுள்ளது. ஆகாசா ஏர் விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி வினய் துபே இது தொடர்பாக தனது மகிழ்ச்சியை தெரிவித்துள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu