பாகிஸ்தான் லாகூரில் 44 ஆண்டுகளில் இல்லாத மழை

August 2, 2024

பாகிஸ்தானின் லாகூரில் 44 ஆண்டுகளில் இல்லாத கனமழை பெய்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் லாகூரில் 214 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. இது 1979-ம் ஆண்டு பதிவான 207 மில்லி மீட்டர் என்ற முந்தைய சாதனையை முறியடித்துள்ளது. இந்த கனமழையால், பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கி, மக்களின் அன்றாட வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதால், மக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். வெள்ளத்தில் மூழ்கி, குறைந்தது 4 பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் […]

பாகிஸ்தானின் லாகூரில் 44 ஆண்டுகளில் இல்லாத கனமழை பெய்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் லாகூரில் 214 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. இது 1979-ம் ஆண்டு பதிவான 207 மில்லி மீட்டர் என்ற முந்தைய சாதனையை முறியடித்துள்ளது. இந்த கனமழையால், பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கி, மக்களின் அன்றாட வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதால், மக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். வெள்ளத்தில் மூழ்கி, குறைந்தது 4 பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன. 50-க்கும் மேற்பட்ட வாகனங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. சிக்கித் தவிக்கும் மக்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu