சீனா ஓபன் ஆண்கள் அரையிறுதியில், கார்லோஸ் அல்காரஸ் மெத்வதேவை எளிதில் வெற்றி பெற்றார்.
சீனா ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆண்கள் அரையிறுதி ஆட்டங்கள் நடைபெற்று வருகிறது. அதில் இன்று நடந்த முதல் அரையிறுதியில், ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அல்காரஸ், ரஷியாவின் டேனில் மெத்வதேவ் மீது 7-5, 6-3 என்ற செட் கணக்கில் வெற்றி கண்டார்.இதன் மூலம், அவர் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். நாளை இறுதிப்போட்டி நடக்கவுள்ளது.