ஜாக் மா சீனா வருகை - அலிபாபா குழுமத்தை ஆறாகப் பிரிக்க திட்டம்

March 29, 2023

அலிபாபா குழுமத்தின் தலைவர் ஜாக் மா, சீனாவிற்கு வருகை தந்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. மேலும், அலிபாபா குழுமத்தை 6 பிரிவுகளாக பிரிக்கும் திட்டத்தில் அவர் இறங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த செய்தி வெளியான பின்னர், அலிபாபா நிறுவனத்தின் பங்குகள் 8% வரை உயர்ந்துள்ளன. அலிபாபா குழுமத்தின் மிகப்பெரிய மறுசீரமைப்பு நடவடிக்கையாக இந்தப் பிரிவு சொல்லப்பட்டுள்ளது. கிளவுட் இன்டெலிஜென்ஸ், டவ்பாவ் மால் காமர்ஸ், லோக்கல் சர்வீசஸ், கெய்னியோ ஸ்மார்ட் லாஜிஸ்டிக்ஸ், குளோபல் டிஜிட்டல் காமர்ஸ், டிஜிட்டல் மீடியா மற்றும் என்டர்டெயின்மென்ட் […]

அலிபாபா குழுமத்தின் தலைவர் ஜாக் மா, சீனாவிற்கு வருகை தந்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. மேலும், அலிபாபா குழுமத்தை 6 பிரிவுகளாக பிரிக்கும் திட்டத்தில் அவர் இறங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த செய்தி வெளியான பின்னர், அலிபாபா நிறுவனத்தின் பங்குகள் 8% வரை உயர்ந்துள்ளன.

அலிபாபா குழுமத்தின் மிகப்பெரிய மறுசீரமைப்பு நடவடிக்கையாக இந்தப் பிரிவு சொல்லப்பட்டுள்ளது. கிளவுட் இன்டெலிஜென்ஸ், டவ்பாவ் மால் காமர்ஸ், லோக்கல் சர்வீசஸ், கெய்னியோ ஸ்மார்ட் லாஜிஸ்டிக்ஸ், குளோபல் டிஜிட்டல் காமர்ஸ், டிஜிட்டல் மீடியா மற்றும் என்டர்டெயின்மென்ட் ஆகிய ஆறு பிரிவுகளாக நிறுவனம் பிரிகிறது. மேலும், குழுமத்தின் தலைமை செயல் அதிகாரியாக டானியல் ஜாங் நீடிக்க உள்ளார். இது தவிர, அவருக்கு கீழ், இந்த 6 பிரிவுகளுக்கும் தனித்தனியாக தலைமை செயல் அதிகாரிகள் நியமிக்கப்பட உள்ளனர். இதன் மூலம், அனைத்து துறைகளிலும் வேகமான வளர்ச்சியை அலிபாபா குழுமம் எட்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu