இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு ஏணி சின்னம் ஒதுக்கீடு

March 23, 2024

பாராளுமன்ற தேர்தலில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு ஏணி சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி முதல் கட்டமாக நடைபெற உள்ளது. இதில் திமுக 39 தொகுதிகளில் 21 தொகுதிகளில் போட்டியிடுகிறது. மீதமுள்ள தொகுதிகளில் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ் ஒன்பது இடத்திலும், விடுதலை சிறுத்தைகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்,இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் தலா இரண்டு இடங்களிலும், மதிமுக, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி ஆகியவை […]

பாராளுமன்ற தேர்தலில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு ஏணி சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி முதல் கட்டமாக நடைபெற உள்ளது. இதில் திமுக 39 தொகுதிகளில் 21 தொகுதிகளில் போட்டியிடுகிறது. மீதமுள்ள தொகுதிகளில் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ் ஒன்பது இடத்திலும், விடுதலை சிறுத்தைகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்,இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் தலா இரண்டு இடங்களிலும், மதிமுக, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி ஆகியவை தலா ஒரு இடத்திலும் போட்டியிடுகின்றன. இதில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி இராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடுகிறது. இக்கட்சிக்கு இந்திய தேர்தல் ஆணையம் ஏணி சின்னம் ஒதுக்கீடு செய்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu