டெல்லி சுனேரி பாக் சாலையில் உள்ள ஐந்தாம் எண் மாளிகையை ராகுல் காந்திக்கு ஒதுக்கீடு செய்ய மத்திய அரசு முன்வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
காங்கிரஸ் மூத்த தலைவர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினரான ராகுல் காந்திக்கு முன்னதாக டெல்லி துக்ளக் லேனில் இருந்த 12ஆம் எண் வீடு அரசு சார்பில் ஒதுக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் அவதூறு வழக்கில் சிறை சென்று எம்.பி பதவி பறிபோனதால் அந்த வீட்டை அவர் காலி செய்திருந்தார். பின்னர் மீண்டும் அவரது எம்.பி பதவி திரும்ப பெறப்பட்டதும் அவருக்கு அதே வீடு ஒதுக்கப்பட்டது. ஆனால் அவர் அந்த வீட்டில் குடியேறவில்லை. இந்நிலையில் பிரதமர் மோடி தலைமையிலான புதிய அரசில் ராகுல் காந்தி மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் பதவியில் உள்ளார். எனவே இவர் கூடுதல் அந்தஸ்து கொண்ட பதவியில் இருப்பதால் அவருக்கு அதிக வசதிகள் கொண்ட வீடு ஒதுக்கப்பட வேண்டும். எனவே டெல்லி சுனெரி பாக் சாலையில் உள்ள ஐந்தாம் எண் மாளிகையை ராகுல் காந்திக்கு ஒதுக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.