இந்தியாவில் அமேசான் ப்ரைம் திட்டத்திற்கான சந்தா கட்டணம் ஆண்டுக்கு 1499 ரூபாயாக உள்ளது. தற்போது, அமேசான் நிறுவனம், புதிய மலிவு விலை சந்தா திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. ‘அமேசான் பிரைம் லைட்’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த சந்தா திட்டத்தில், ஆண்டொன்றுக்கு 999 ரூபாய் மட்டுமே கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. அமேசான் ப்ரைம் தளத்தில் உள்ள அனைத்து வீடியோக்களையும், குறிப்பிட்ட சில வரம்புக்குள் அமேசான் பிரைம் லைட் பயனர்கள் பெற முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமேசான் பிரைம் லைட் சேவையை 2 சாதனங்களில் மட்டுமே பெற முடியும். அனைத்து வீடியோ கன்டென்ட்களும் ஹெச் டி தரத்தில் மட்டுமே இருக்கும். அமேசான் மியூசிக், பிரைம் ரீடிங், அமேசான் கேமிங் போன்ற சேவைகள், அமேசான் ப்ரைம் லைட் சந்தாவில் இருக்காது. முக்கியமாக, வீடியோக்களுக்கு இடையே விளம்பரங்கள் இடம் பெறும். இந்த மலிவு விலை சந்தா திட்டத்தின் மூலம், அதிக எண்ணிக்கையிலான வாடிக்கையாளர்களை ஈர்க்க முடியும் என்று நம்புவதாக அமேசான் தெரிவித்துள்ளது.