உணவு மற்றும் கல்வியைத் தொடர்ந்து, அமேசானின் மொத்த விலை விநியோக வர்த்தகம் நிறுத்தம்

November 29, 2022

அமேசான் இந்தியா நிறுவனம், அண்மையில் அமேசான் ஃபுட் மற்றும் அமேசான் அகாடமி ஆகியவற்றின் செயல்பாடுகளை நிறுத்துவதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து, தற்பொழுது மொத்த விலை விநியோக வர்த்தகமான அமேசான் டிஸ்ட்ரிபியூஷன் -ஐ நிறுத்த உள்ளதாக தெரிவித்துள்ளது. அமேசான் நிறுவனம், தனது முதன்மை வர்த்தகமான இணைய வர்த்தகத்தில் மட்டுமே கவனம் செலுத்த விரும்பி, அதை சார்ந்த பிற நிறுவனங்களை மூடும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. பெங்களூரு, ஹூப்ளி, மைசூரு ஆகிய பகுதிகளில் அமேசான் டிஸ்ட்ரிபியூஷன் செயல்பட்டு வந்தது. இதில் கிட்டத்தட்ட […]

அமேசான் இந்தியா நிறுவனம், அண்மையில் அமேசான் ஃபுட் மற்றும் அமேசான் அகாடமி ஆகியவற்றின் செயல்பாடுகளை நிறுத்துவதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து, தற்பொழுது மொத்த விலை விநியோக வர்த்தகமான அமேசான் டிஸ்ட்ரிபியூஷன் -ஐ நிறுத்த உள்ளதாக தெரிவித்துள்ளது.

அமேசான் நிறுவனம், தனது முதன்மை வர்த்தகமான இணைய வர்த்தகத்தில் மட்டுமே கவனம் செலுத்த விரும்பி, அதை சார்ந்த பிற நிறுவனங்களை மூடும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. பெங்களூரு, ஹூப்ளி, மைசூரு ஆகிய பகுதிகளில் அமேசான் டிஸ்ட்ரிபியூஷன் செயல்பட்டு வந்தது. இதில் கிட்டத்தட்ட 50 பேர் பணியாற்றி வந்தனர். இந்த நிறுவனம் மொத்த விலையில் சில்லறை வணிகர்களுக்கு பொருட்களை விநியோகித்து வந்தது. இந்நிலையில் இதன் சேவைகள் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அமேசான் நிறுவனம், செலவுகளைக் குறைக்கும் பொருட்டு, இந்த நடவடிக்கைகளை மேற்கொள்வதாக கூறப்படுகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu