அமெரிக்கர்கள் உடனே ரஷியாவிலிருந்து வெளியேற வேண்டும் - அமெரிக்க மந்திரி பிளிங்கன்

March 31, 2023

அமெரிக்கர்கள் உடனே ரஷியாவிலிருந்து வெளியேற வேண்டும் என அமெரிக்க வெளியுறவு மந்திரி ஆண்டனி பிளிங்கன் தெரிவித்துள்ளார். உக்ரைனுக்கு எதிரான ரஷியாவின் போர் 2-ம் ஆண்டாக தொடர்கிறது. போர்ச்சூழலை பற்றி செய்தி சேகரிக்கச் சென்ற அமெரிக்காவின் வால் ஸ்ட்ரீட் ஜர்னல் பத்திரிகையைச் சேர்ந்த ஈவான் கெர்ஷ்கோவிச் என்ற நிருபரை ரஷியா கைது செய்துள்ளது. இதுபற்றி வால் ஸ்ட்ரீட் ஜர்னல் பத்திரிகை ஆழ்ந்த வருத்தம் தெரிவித்துள்ளது. ரஷியாவின் மத்திய பாதுகாப்பு துறை எனப்படும் எப்.எஸ்.பி. என்ற உளவு அமைப்பு வெளியிட்ட […]

அமெரிக்கர்கள் உடனே ரஷியாவிலிருந்து வெளியேற வேண்டும் என அமெரிக்க வெளியுறவு மந்திரி ஆண்டனி பிளிங்கன் தெரிவித்துள்ளார்.

உக்ரைனுக்கு எதிரான ரஷியாவின் போர் 2-ம் ஆண்டாக தொடர்கிறது. போர்ச்சூழலை பற்றி செய்தி சேகரிக்கச் சென்ற அமெரிக்காவின் வால் ஸ்ட்ரீட் ஜர்னல் பத்திரிகையைச் சேர்ந்த ஈவான் கெர்ஷ்கோவிச் என்ற நிருபரை ரஷியா கைது செய்துள்ளது. இதுபற்றி வால் ஸ்ட்ரீட் ஜர்னல் பத்திரிகை ஆழ்ந்த வருத்தம் தெரிவித்துள்ளது.

ரஷியாவின் மத்திய பாதுகாப்பு துறை எனப்படும் எப்.எஸ்.பி. என்ற உளவு அமைப்பு வெளியிட்ட செய்தியில், யெகாடரீன்பர்க் மாகாணத்தில், உரால் மலைப்பிரதேச பகுதியில் வைத்து வால் ஸ்ட்ரீட் ஜர்னல் பத்திரிகை நிருபர் கைது செய்யப்பட்டார். அமெரிக்க தரப்பு உத்தரவின்படி ஈவான் செயல்பட்டு, ரஷிய ராணுவத்தின் தொழில் வளாகத்தில் உள்ள நிறுவனங்களில் ஒன்றின் செயல்பாடுகள் பற்றி ரகசிய தகவல்களை சேகரித்துள்ளார் என தெரிவித்துள்ளது. இந்நிலையில், அமெரிக்க வெளியுறவு மந்திரி ஆண்டனி பிளிங்கன் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், ரஷியாவில் வசிக்கும் அமெரிக்கர்கள் உடனடியாக வெளியேற வேண்டும். ரஷிய பத்திரிகையாளர் கைது செய்யப்பட்டுள்ளது வருத்தம் அளிக்கிறது என பதிவிட்டுள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu