அமெரிக்காவின் பெடரல் வங்கி, கடந்த 14 மாதங்களில், 10 வது முறையாக வட்டி விகிதங்களை உயர்த்தி உள்ளது. நேற்று, வட்டி விகிதங்கள் 0.25% உயர்த்தப்படுவதாக அறிவிப்பு வெளியானது. எனவே, கடந்த 2022 மார்ச் மாதத்துடன் ஒப்பிடுகையில், 5% முதல் 5.25% வரை உயர்வு பதிவாகியுள்ளது. அமெரிக்க பெடரல் வங்கி, வட்டி விகிதங்களை உயர்த்துவது நேற்றே இறுதியாக இருக்கும் என்று கருதப்படுகிறது.
அமெரிக்காவில், அண்மைக்காலமாக வங்கித் துறை தொடர் தோல்விகளை சந்தித்தது. எனவே, உலகின் மிகப்பெரிய பொருளாதாரமாக இருக்கும் அமெரிக்காவில், வட்டி விகிதங்கள் உயர்த்தப்பட்டுள்ளன. இந்த வட்டி விகித உயர்வு, பிற உலக நாடுகளின் பொருளாதாரத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது. மேலும், அமெரிக்க மத்திய வங்கி நிர்ணயித்துள்ள தற்போதைய வட்டி விகிதம், கடந்த 16 வருடங்களில் பதிவான உச்ச வட்டி விகிதமாக சொல்லப்பட்டுள்ளது.