விக்ரம் லேண்டர் எடுத்த நிலவு புகைப்படங்கள் - இஸ்ரோ பகிர்வு

சந்திரயான் விண்கலத்தில் இருந்து விடுபட்ட விக்ரம் லேண்டர், நிலவில் தரையிறங்கும் முயற்சியில் இயங்கி வருகிறது. அந்த வகையில், விக்ரம் லேண்டர் எடுத்த நிலவு புகைப்படங்களை இஸ்ரோ பகிர்ந்துள்ளது. சந்திரயான் 2 திட்டத்தில், விக்ரம் லேண்டர் தரையிறக்கத்தின் போது முக்கிய கோளாறு ஏற்பட்டதால் திட்டம் தோல்வியடைந்தது. அந்த வகையில், குறைகளை சரி செய்து சுமூகமான தரை இறக்கத்திற்கு தகுந்தவாறு சந்திரயான் 3 வடிவமைக்கப்பட்டுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. அதன்படி, நிலவின் மேற்பரப்பு தன்மையை அறிந்து, பாதுகாப்பான இடத்தில் விக்ரம் லேண்டரை […]

சந்திரயான் விண்கலத்தில் இருந்து விடுபட்ட விக்ரம் லேண்டர், நிலவில் தரையிறங்கும் முயற்சியில் இயங்கி வருகிறது. அந்த வகையில், விக்ரம் லேண்டர் எடுத்த நிலவு புகைப்படங்களை இஸ்ரோ பகிர்ந்துள்ளது.

சந்திரயான் 2 திட்டத்தில், விக்ரம் லேண்டர் தரையிறக்கத்தின் போது முக்கிய கோளாறு ஏற்பட்டதால் திட்டம் தோல்வியடைந்தது. அந்த வகையில், குறைகளை சரி செய்து சுமூகமான தரை இறக்கத்திற்கு தகுந்தவாறு சந்திரயான் 3 வடிவமைக்கப்பட்டுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. அதன்படி, நிலவின் மேற்பரப்பு தன்மையை அறிந்து, பாதுகாப்பான இடத்தில் விக்ரம் லேண்டரை தரையிறக்கும் முயற்சியில் இஸ்ரோ ஈடுபட்டுள்ளது. அதற்கு லேண்டர் எடுத்துள்ள இந்த புகைப்படங்கள் மிகவும் துணைபுரிவதாக கூறியுள்ளது.

விக்ரம் லேண்டரில் உள்ள எல் எச் டி ஏ சி கேமரா எடுத்த 4 புகைப்படங்களை இஸ்ரோ வெளியிட்டுள்ளது. இஸ்ரோவின் எக்ஸ் தளத்தில் இன்று புகைப்படங்கள் வெளியாகி உள்ளன. கடந்த ஆகஸ்ட் 19ஆம் தேதி இந்த புகைப்படங்கள் எடுக்கப்பட்டதாக இஸ்ரோ கூறியுள்ளது. மேலும், லேண்டர் தரை இறக்கத்திற்கு, பள்ளத்தாக்குகள், மலைப்பாங்கான பகுதிகள் ஆகியவற்றை தவிர்த்து வருவதாக இஸ்ரோ கூறியுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu