ஹிண்டன்பர்க் ரிசர்ச் வெளியிட்ட அறிக்கை இந்திய பங்குச் சந்தையில் கணிசமான அளவு தாக்கத்தை ஏற்படுத்தியது. ஆரம்ப வர்த்தகத்தில் 0.6% சரிவை சந்தித்த நிஃப்டி 50 மற்றும் சென்செக்ஸ் குறியீடுகள், நிதிச் சேவை மற்றும் தனியார் வங்கித் துறையின் லாபத்தால் மீண்டன. இறுதியில், NSE நிஃப்டி 50 குறியீடு 0.08% குறைந்து 24,347 ஆகவும், BSE சென்செக்ஸ் 0.07% குறைந்து 79,648.92 ஆகவும் பதிவானது.
இன்றைய வர்த்தகத்தில், அதானி எண்டர்பிரைசஸ், அதானி பவர், அதானி போர்ட்ஸ், வோடபோன், சன் டிவி, எல்ஐசி, ஐடிசி, டிசிஎஸ், ரிலையன்ஸ், ஆகியவை வீழ்ச்சியடைந்தன. அதே சமயத்தில், இன்போசிஸ், டாடா மோட்டார்ஸ், டாடா ஸ்டீல், ஹெச்டிஎஃப்சி வங்கி, வோல்டாஸ், ரயில் விகாஸ் நிகாம், எஸ் வங்கி, சுஸ்லான் எனர்ஜி போன்றவை உயர்ந்தன.