போர் குறித்து நேதன்யாகுவுடன் பைடன் ஆலோசனை

April 4, 2024

இன்று அமெரிக்க அதிபர் பைடன் இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகுவுடன் தொலைபேசியில் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். காசாவில் இஸ்ரேல் நடத்திய வான் தாக்குதலில் தொண்டு நிறுவனத்தை சேர்ந்த 7 பேர் பலியாகினர். இந்த சம்பவத்திற்கு ஐநா உட்பட உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இந்த தாக்குதல் தவறுதலாக நடத்தப்பட்டது என்று இஸ்ரேல் பிரதமர் விளக்கம் அளித்துள்ளார். எனினும், அமெரிக்க அதிபர் பைடன் இந்த சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ஸ்பெயின் மற்றும் போலந்து நாடுகள் இந்த விவகாரம் […]

இன்று அமெரிக்க அதிபர் பைடன் இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகுவுடன் தொலைபேசியில் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.

காசாவில் இஸ்ரேல் நடத்திய வான் தாக்குதலில் தொண்டு நிறுவனத்தை சேர்ந்த 7 பேர் பலியாகினர். இந்த சம்பவத்திற்கு ஐநா உட்பட உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இந்த தாக்குதல் தவறுதலாக நடத்தப்பட்டது என்று இஸ்ரேல் பிரதமர் விளக்கம் அளித்துள்ளார். எனினும், அமெரிக்க அதிபர் பைடன் இந்த சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ஸ்பெயின் மற்றும் போலந்து நாடுகள் இந்த விவகாரம் குறித்து இஸ்ரேலிடம் விளக்கம் கேட்டுள்ளன. இங்கிலாந்தும் இந்த சம்பவத்தை உடனடியாக விசாரிக்க வேண்டும் என்று இஸ்ரேலை வற்புறுத்தியுள்ளது.

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இது குறித்து கூறுகையில் பொதுமக்களை பாதுகாப்பதில் போதுமான நடவடிக்கைகளை இஸ்ரேல் மேற்கொள்ளவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளார். இன்று அமெரிக்க அதிபர் பைடன் இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகுவுடன் தொலைபேசியில் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். அமெரிக்க அதிபருக்கு இந்த சம்பவம் பெரும் மனவேதனையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தியுள்ளதாக வெள்ளை மாளிகை கூறியுள்ளது. என்றபோதிலும், காசா போரில் இஸ்ரேலுக்கு ஆதரவளிப்பதில் அமெரிக்கா தன் நிலையில் இருந்து பெரிய அளவில் எந்த மாறுதலையும் ஏற்படுத்தவில்லை.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu