அம்மோனிய வாயு கசிவு - கிராம மக்களுக்கு இழப்பீடு வழங்க முடிவு

January 12, 2024

சென்னையில் அம்மோனியா வாயு கசிவினால் பாதிக்கபட்ட மக்களுக்கு இழப்பீடு வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. சென்னையில் எண்ணூர் பெரியகுப்பம் பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான உர தொழிற்சாலையில் திடீரென அமோனியா திரவ வாயு கசிவு ஏற்பட்டது. மேலும் இந்த வாயு கசிவு காற்றில் பரவியதில் பெரும்பாலான மக்களுக்கு வாந்தி, மயக்கம், கண்ணெரிச்சல் ஆகியவை ஏற்பட்டு அவர்கள உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அதனை தொடர்ந்து நேற்று முதலமைச்சரின் தனி செயலாளர் தலைமையில் அம்மோனியா […]

சென்னையில் அம்மோனியா வாயு கசிவினால் பாதிக்கபட்ட மக்களுக்கு இழப்பீடு வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
சென்னையில் எண்ணூர் பெரியகுப்பம் பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான உர தொழிற்சாலையில் திடீரென அமோனியா திரவ வாயு கசிவு ஏற்பட்டது. மேலும் இந்த வாயு கசிவு காற்றில் பரவியதில் பெரும்பாலான மக்களுக்கு வாந்தி, மயக்கம், கண்ணெரிச்சல் ஆகியவை ஏற்பட்டு அவர்கள உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அதனை தொடர்ந்து நேற்று முதலமைச்சரின் தனி செயலாளர் தலைமையில் அம்மோனியா வாயு விவகாரம் தொடர்பாக எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆய்வு நடைபெற்றது. இதில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தெரிய வந்துள்ளது. இழப்பீடு தொடர்பாக ஒரு சில நாட்களில் முடிவு எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu