ரஷியாவில் வெடிமருந்து தொழிற்சாலையில் விபத்து- 4 பேர் பலி

June 21, 2023

ரஷியாவில் வெடிமருந்து தொழிற்சாலையில் ஏற்பட்ட விபத்தில் 4 பேர் பலியாகியுள்ளனர். ரஷிய தலைநகர் மாஸ்கோவின் தென் கிழக்கே உள்ள தம்போவ் பகுதியில் வெடிமருந்து தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலையில் திடீரென்று வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த வெடிவிபத்தில் 4 தொழிலாளர்கள் பலியானார்கள். மேலும் 12 பேர் காயமடைந்தனர். வெடிவிபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது. இது பயங்கரவாத தாக்குதல் அல்ல என்று தம்போவ் கவர்னர் மாக்சிம் யெகோரோவ் தெரிவித்தார். உக்ரைன் மீது ரஷியா போர் தாக்குதல் […]

ரஷியாவில் வெடிமருந்து தொழிற்சாலையில் ஏற்பட்ட விபத்தில் 4 பேர் பலியாகியுள்ளனர்.

ரஷிய தலைநகர் மாஸ்கோவின் தென் கிழக்கே உள்ள தம்போவ் பகுதியில் வெடிமருந்து தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலையில் திடீரென்று வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த வெடிவிபத்தில் 4 தொழிலாளர்கள் பலியானார்கள். மேலும் 12 பேர் காயமடைந்தனர். வெடிவிபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது. இது பயங்கரவாத தாக்குதல் அல்ல என்று தம்போவ் கவர்னர் மாக்சிம் யெகோரோவ் தெரிவித்தார். உக்ரைன் மீது ரஷியா போர் தாக்குதல் நடத்தி வரும் சூழலில் சில நாட்களாக ரஷியாவின் ஆயுத கிடங்குகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu