கலைஞரின் கனவு இல்லம் திட்டத்திற்கு ரூ.500 கோடி கூடுதல் ஒதுக்கீடு

January 30, 2025

கலைஞரின் கனவு இல்லம் திட்டத்திற்கு கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், கலைஞரின் கனவு இல்லம் திட்டத்திற்கு ரூ.500 கோடியை கூடுதலாக விடுவிக்க உத்தரவிட்டுள்ளார். இதுவரை ரூ. 2,125 கோடி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது 1 லட்சம் வீடுகள் கட்டப்பட்டு வருவதாக அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து, முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளதாவது, 2030-ஆம் ஆண்டுக்குள் ஊரக பகுதிகளில் 8 லட்சம் புதிய குடிசைகள் கட்டப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் வீடுகள் 360 […]

கலைஞரின் கனவு இல்லம் திட்டத்திற்கு கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், கலைஞரின் கனவு இல்லம் திட்டத்திற்கு ரூ.500 கோடியை கூடுதலாக விடுவிக்க உத்தரவிட்டுள்ளார். இதுவரை ரூ. 2,125 கோடி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது 1 லட்சம் வீடுகள் கட்டப்பட்டு வருவதாக அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து, முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளதாவது, 2030-ஆம் ஆண்டுக்குள் ஊரக பகுதிகளில் 8 லட்சம் புதிய குடிசைகள் கட்டப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் வீடுகள் 360 சதுர அடியில் கட்டப்பட்டு, குறைந்த விலையில் சிமெண்ட் மற்றும் இரும்பு வழங்கப்படுகிறது. இதுவரை ரூ. 1600.85 கோடி செலவிடப்பட்டுள்ள நிலையில், ரூ.500 கோடி கூடுதலாக விடுவிக்கப்பட்டுள்ளது.இந்த நடவடிக்கையின் மூலம், இவ்வாண்டிற்குள் அனைத்து வீடுகளும் முடிக்கப்பட்டு மக்களுக்கு ஒப்படைக்கப்பட உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu