இலங்கையில் 13,400 வாக்குச்சாவடிகளில் நாளை காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
இலங்கையில் அதிபர் தேர்தல் வரும் 21-ம் தேதி நடைபெற உள்ளது. இதில் தற்போதைய அதிபர் ரணில் விக்ரமசிங்கே, எதிர்க்கட்சி வேட்பாளர் சஜித் பிரேமதாசா மற்றும் தேசிய மக்கள் சக்தி கட்சியின் அருரா குமார திசநாயகே ஆகியோர் களமிறங்கி உள்ளனர். நாட்டில் 13,400 வாக்குச்சாவடிகளில் சனிக்கிழமை காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. சுமார் 1.7 கோடிக்கும் அதிகமான வாக்காளர்கள் வாக்கு செலுத்த உள்ளனர்.
நாங்கள் வெற்றி பெறுவது உறுதி என திசநாயகே தெரிவித்தார். வாக்களிப்பின் மூலம் அவர் முழுமையான நிர்வாகத்தையும், சமூக மாற்றத்தையும் கொண்டு வருவதாக வாக்கு அளித்தார். இந்நிலையில், அதிபர் ரணில் விக்ரமசிங்கே, சர்வதேச நாணய நிதியத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் பொருளாதார மீட்பு நடவடிக்கைகளை மிக முக்கியமாக சுட்டிக்காட்டினார். மற்றொரு வேட்பாளர் சஜித் பிரேமதாசா, 20 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என உறுதியளித்தார்.