நாசா விண்வெளி வீரராக பட்டம் பெற்ற இந்திய வம்சாவளி இளைஞர்

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மருத்துவர் அணில் மேனன் நாசா விண்வெளி வீரராக பயிற்சி பெற்று தற்போது பட்டம் பெற்றுள்ளார். இந்தியா மற்றும் உக்ரைன் நாட்டில் இருந்து குடியேறிய பெற்றோர்களுக்கு பிறந்த அனில் மேனன், கடந்த 2021 ஆம் ஆண்டு நாசாவால் பயிற்சி பெறுவதற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். மருத்துவரான இவர், விண்வெளி துறையிலும் குறிப்பிட்ட ஆய்வுகளை நிகழ்த்தியுள்ளார். ஹார்வார்டு பல்கலைக்கழகத்தில் நியூரோ பயாலஜி யில் பட்டப்படிப்பும், ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படிப்பும் பயின்ற அவர், ஸ்டான்போர்ட் மெடிக்கல் ஸ்கூல் […]

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மருத்துவர் அணில் மேனன் நாசா விண்வெளி வீரராக பயிற்சி பெற்று தற்போது பட்டம் பெற்றுள்ளார்.

இந்தியா மற்றும் உக்ரைன் நாட்டில் இருந்து குடியேறிய பெற்றோர்களுக்கு பிறந்த அனில் மேனன், கடந்த 2021 ஆம் ஆண்டு நாசாவால் பயிற்சி பெறுவதற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். மருத்துவரான இவர், விண்வெளி துறையிலும் குறிப்பிட்ட ஆய்வுகளை நிகழ்த்தியுள்ளார். ஹார்வார்டு பல்கலைக்கழகத்தில் நியூரோ பயாலஜி யில் பட்டப்படிப்பும், ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படிப்பும் பயின்ற அவர், ஸ்டான்போர்ட் மெடிக்கல் ஸ்கூல் மூலம் மருத்துவத்தில் பட்டம் வென்றார். மேலும், நாசாவில் இணைவதற்கு முன்பு, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் முதல் பறக்கும் அறுவை சிகிச்சை நிபுணராக வரலாறு படைத்தார். இவை தவிர, எவரெஸ்ட் ஏறுபவர்களுக்கான மீட்பு நடவடிக்கைகளில் பணியாற்றியது, ஆப்கானிஸ்தான் விடுதலையில் பணியாற்றியது, என அவரது சாதனை பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu