செப்டம்பர் 15ஆம் தேதி அன்று அறிஞர் அண்ணாவின் பிறந்த நாள் அன்று போலீசார்களுக்கு அண்ணா பதக்கம் வழங்கப்பட உள்ளது.
தமிழகத்தில் அர்ப்பணிப்புடனும் ஈடுபாட்டுடனும் பணியாற்றும் காவல்துறை, தீயணைப்பு துறை, மீட்பு பணித்துறை, சிறைத்துறை, ஊர்க்காவல் படை மற்றும் பல துறைகளில் பணியாற்றும் காவலர்களுக்கு அண்ணாவின் பிறந்த நாளான செப்டம்பர் 15ஆம் தேதி அன்று அன்று தமிழக முதலமைச்சர் பதக்கங்கள் வழங்கப்படும் என அறிவித்துள்ளார். இதில் தேர்ந்தெடுக்கப்பட்ட துறைகளில் 127 பணியாளர்களுக்கு "மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அண்ணா பதக்கங்கள்" வழங்கிட முதலமைச்சர் மு க ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.