சுதந்திர தினம் மற்றும் விடுமுறையினை முன்னிட்டு 1,190 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
சுதந்திர தினம் மற்றும் தொடர் விடுமுறையை முன்னிட்டு, அரசு விரைவு போக்குவரத்து கழகம் 1,190 சிறப்பு பேருந்துகளை இயக்கவுள்ளதாக அறிவித்துள்ளது. சென்னையுடன் தொடர்புடைய இடங்களுக்கு, இன்று 470 பேருந்துகள் இயக்கப்படும். வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமை 365 பேருந்துகள் இயக்கப்படும். கோயம்பேட்டிலிருந்து பல்வேறு இடங்களுக்கு இன்று 70 பேருந்துகள், மற்ற நாட்களில் 65 பேருந்துகள் இயக்கப்படும். பெங்களூரு, திருப்பூர், ஈரோடு, கோவை உள்ளிட்ட இடங்களுக்குமாக 200 பேருந்துகள் இயக்கப்படும். 18-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை, சென்னையுடன் மற்றும் பெங்களூருடன் தொடர்புடைய சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்.