பெண் டாக்டர் கொலைக்கு எதிரான போராட்டம் தொடரும் என ஜூனியர் டாக்டர்கள் அறிவித்துள்ளனர்.
கொல்கத்தாவில், பெண் டாக்டர் கொலைக்கான நீதி கேட்டு ஜூனியர் டாக்டர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே
முதல்வர் மம்தா பானர்ஜி, போராட்டக்காரர்களுடன் நடந்த பேச்சுவார்த்தையில், கொல்கத்தா போலீஸ் கமிஷனரை நீக்குவதற்கான மூன்று நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டார். மேலும் பாஜக அரசு மம்தா பானர்ஜியை ராஜினாமா செய்யக் கோரி வருகிறது. மேலும் போராட்டக்காரர்கள் உடன் ஏற்பட்ட பேச்சு வார்த்தை தோல்வி அடைந்ததை அடுத்து, ஜூனியர் டாக்டர்கள் அவர்கள் கோரிக்கைகள் நிறைவேறும்வரை போராட்டத்தை தொடர முடிவு செய்துள்ளனர்.