அக்டோபர் 2ஆம் தேதி, பூமியின் தெற்கு அரைக்கோளத்தில் வளைய சூரிய கிரகணம் ஏற்படுகிறது. இந்த முறை, சூரியனை நிலவு முழுமையாக மறைக்காமல், ஒரு பகுதியை மட்டும் மறைப்பதால் சூரியனைச் சுற்றி ஒரு நெருப்பு வளையம் போல் தெரியும். இந்திய நேரப்படி பார்க்கும்போது, இந்த கிரகணம் நம் நாட்டின் இரவு நேரத்தில் நிகழ்வதால், இந்தியாவில் வசிக்கும் மக்களால் இதை நேரில் காண முடியாது.
இந்த வளைய சூரிய கிரகணம் தெற்கு பசிபிக் பெருங்கடலில் மதியம் 3:42 UTC மணிக்கு தொடங்கி, தென் அமெரிக்காவின் அர்ஜென்டினாவில் 6:45 UTC மணிக்கு உச்சத்தை எட்டும். பின்னர் தெற்கு அட்லாண்டிக் பெருங்கடலில் 8:39 UTC மணிக்கு முடிவடையும். இந்த முழு நிகழ்வும் சுமார் 6 மணி நேரம் நீடிக்கும். இந்த கிரகணத்தின் போது நிலவின் நிழலின் வேகம், இடத்தை பொறுத்து மாறுபடும். சில இடங்களில் மணிக்கு 10 மில்லியன் கிலோமீட்டர் வேகத்தில் நகரும். ஆனால், பசிபிக் பெருங்கடலில் ஈஸ்டர் தீவுக்கு அருகே இந்த வேகம் மணிக்கு 2,057 கிலோமீட்டர் என மிகவும் குறைவாக இருக்கும். இதனால், இந்த இடத்தில் நெருப்பு வளையம் 7 நிமிடங்கள் 25 வினாடிகள் வரை நீடிக்கும்.