சென்னை மற்றும் பெங்களூர் இடையே தற்போது ஒரு வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இது மைசூர் வரை சென்று வருகிறது.
தமிழகம் மற்றும் கர்நாடக இடையே இயக்கப்படும் வந்தே பாரத் ரயில் இடையே மிகுந்த வரவேற்பு உள்ளது. அதனால் இதே வழித்தடத்தில் மேலும் ஒரு ரயிலை இயக்க தெற்கு ரயில்வே திட்டமிட்டு இருந்தது. புதிதாக வரும் வந்தே பாரத் ரயிலில் சில கூடுதல் வசதிகள் இடம் பெற உள்ளன. இந்த ரயிலை பிரதமர் மோடி வருகிற 12 ஆம் தேதி தொடங்கி வைப்பார் என எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. மேலும் திருவனந்தபுரம் இடையே இயக்கப்படும் வந்தே பாரத் ரயில் சேவையை மங்களூர் வரை நீட்டிப்பு செய்யும் சேவையை தொடங்கி வைக்க உள்ளார்.