பாகிஸ்தான் இடைக்காலப் பிரதமராக அன்வர் உல் ஹக் தேர்வு

August 14, 2023

கடந்த வாரம், பாகிஸ்தான் நாட்டின் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது. அதை தொடர்ந்து, தேர்தல் நடைபெறும் வரையில் இடைக்கால பிரதமராக அன்வர் உல் ஹக் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் பலுசிஸ்தான் அவாமி கட்சியை சேர்ந்தவராவார். கடந்த சனிக்கிழமை, பாகிஸ்தான் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவரை பாகிஸ்தான் ஆட்சிப் பொறுப்பை ஏற்க தேர்வு செய்துள்ளனர். பாகிஸ்தான் பிரதமர் சபாஷ் ஷெரீப், இடைக்கால பிரதமர் நியமனம் குறித்து அந்நாட்டின் எதிர்க்கட்சி உறுப்பினர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அதன் முடிவில், எதிர்க்கட்சி தலைவர் ராஜா ரியாஸ் மற்றும் சபாஷ் […]

கடந்த வாரம், பாகிஸ்தான் நாட்டின் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது. அதை தொடர்ந்து, தேர்தல் நடைபெறும் வரையில் இடைக்கால பிரதமராக அன்வர் உல் ஹக் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் பலுசிஸ்தான் அவாமி கட்சியை சேர்ந்தவராவார். கடந்த சனிக்கிழமை, பாகிஸ்தான் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவரை பாகிஸ்தான் ஆட்சிப் பொறுப்பை ஏற்க தேர்வு செய்துள்ளனர்.

பாகிஸ்தான் பிரதமர் சபாஷ் ஷெரீப், இடைக்கால பிரதமர் நியமனம் குறித்து அந்நாட்டின் எதிர்க்கட்சி உறுப்பினர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அதன் முடிவில், எதிர்க்கட்சி தலைவர் ராஜா ரியாஸ் மற்றும் சபாஷ் ஷரீஃப் ஆகியோர் இணைந்து, அன்வர் உல் ஹக் பெயரை பரிந்துரை செய்தனர். அதற்கு, பாகிஸ்தான் அதிபர் ஆரிப் ஆல்வி ஒப்புதல் வழங்கியதை தொடர்ந்து, அன்வர் உல் ஹக் இடைக்கால பிரதமராக பொறுப்பேற்க உள்ளார். பாகிஸ்தான் நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட 90 நாட்களுக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும். தேர்தல் முடிவில் புதிய ஆட்சியாளர் அறிவிக்கப்படுவார். அந்த வகையில், அன்வர் உல் ஹக் தேர்தலை பொறுப்பேற்று நடத்தும் முக்கிய பொறுப்பில் நியமிக்கப்பட்டுள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu